நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தாசரே இத்தரணியை அன்பாய்

Thaasarae Iththaranniyai Anpaay

தாசரே இத்தரணியை அன்பாய்

இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

நேசமாய் இயேசுவைக் கூறுவோம்

அவரைக் காண்பிப்போம் – மாவிருள்

நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம்

வருத்தப்பட்டு பாரம் சுமந்தோரை வருந்தி

யன்பாய் அழைத்திடுவோம் – உரித்தாய்

இயேசு பாவப் பாரத்தை நமது துக்கத்தை

நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே

– தாசரே

பசியுற்றோர்க்கு பிணியாளிகட்கு

பட்சமாக உதவி செய்வோம்

உசித நன்மைகள் நிறைந்து – தமை

மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே

– தாசரே

நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை

நீசரை நாம் உயர்த்திடுவோம்

பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்

நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே

– தாசரே

மார்க்கம் தப்பி நடப்போரை சத்ய வழிக்குள்

வந்திடச் சேர்த்திடுவோம் – ஊக்கமாக

ஜெபித்திடுவோம் நாம் முயன்றிடுவோம்

நாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம்

– தாசரே

இந்து தேச மாது சிரோமணிகள்

விந்தை ஒளிக்குள் வரவழைப்போம்

சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து

நிர்ப்பந்தங்கள் தீர்த்து சிறந்திலங்கிட

– தாசரே