நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தாசனாகிய அப்போதே

Thaasanaakiya Appothae

Ravi Bharath

தாசனாகிய யாக்கோபே

பயப்படாதே திகையாதே

உனக்கு முன்பாக நான் செல்வேன்

வழிகள் செவ்வையாக்குவேன்

இதுவரையும் காத்திட்டேன்

இனியும் காத்திடுவேன்

மறைவில் இருக்கும் பொக்கிஷங்களை

உனக்கு தந்திடுவேன்

வலக்கரத்தினால் தாங்கிடுவேன்

பெலனை தன்திடுவேன்

வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை

ஓட செய்வேன்

உம் மேல் ஆவியும்

ஆசிர்வாதமும் உற்றிடுவேன்

– தாசனாகிய

தாயைப்போல தேற்றிடுவேன்

தந்தைப்போல அணைத்திடுவேன்

கால்கள் கல்களில் இடறாமல்

கருத்தாய் காத்திடுவேன்

நினைத்திடாதே அளவுக்கு நான்

உன்னை உயர்த்திடுவேன்

– தாசனாகிய

ஆறுகளை நீ கடக்கையிலே

உன்னோடு நானிருப்பேன்

அக்கினி ஜ்வாலை உன்னைப்

பற்றாமல் காத்துக்கொள்வேன்

உனக்கு எதிராய் எழும்புவோரை

நானே சிதறடிப்பேன்

– தாசனாகிய