பாடல்
தாங்கி நடத்தும் தேவ கிருபை
Thaangi Nadaththum Thaeva Kirupai
Vincent Samuel
தாங்கி நடத்தும் தேவ கிருபை
எத்தனை ஆச்சரியம் – அதை
சார்ந்து சார்ந்து அனுதினமும்
மகிழ்ந்து வாழுகின்றேன் (2)
அல்லேலூயா அவர் வல்ல நாமத்தை
என்றென்றும் துதித்திடுவேன்- ஆ... ஆ...
துன்ப நேரத்தில் ஆறுதல்
அளிக்கும் இன்ப கிருபையிது
தொல்லை கவலையில் கண்ணீர்
துடைக்கும் அன்பின் கிருபையிது
– அல்லேலூயா அவர்
நேசிப்பவர் எல்லாம் தள்ளி விட்டாலும்
நேசரின் கரம் தாங்கும் – நண்பர்
உற்றாரிலும் உண்மையுள்ளோர் அவர்
நம்புவேன் அவரையே நான்
– அல்லேலூயா அவர்
பஞ்சம் வந்திடினும் அஞ்சிடேனே நான்
தஞ்சம் என் இயேசு உண்டு
வானத்தின் அப்பம் அவரே என் மீட்பர்
புசித்து வாழ்ந்திருப்பேன்
– அல்லேலூயா அவர்