நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தாங்கட்டுமே உம் கிருபை தேவனே

Thaangattumae Um Kirupai Thaevanae

Chandrasekaran

தாங்கட்டுமே உம் கிருபை தேவனே

தனிமையில் நடக்கும் போதெல்லாம்

என் பெலவீனத்தில் உம் கிருபை பூரணம்

என் மேல் இறங்க வேண்டுமே

தனிமையை நினைத்து

அழும் நேரமெல்லாம்

தகப்பனே உம் கிருபை

தாங்கணுமே – 2

உமது சேவைக்காக அழைத்தீர் ஐயா

எந்தன் சேவையை நீர் நினைக்கணும்

உமது தரிசனங்கள் என் வாழ்விலே

நீங்க நிறைவேற்றி முடிக்கணும்

கிருபையே கிருபையே மாறாத

தேவ கிருபையே

கிருபையே கிருபையே

நாள்தோறும் தாங்கும் கிருபையே

– தாங்கட்டும்

உலகில் உபத்திரவம் வரும் போதெல்லாம்

உந்தன் கிருபை என்னை தாங்கும்

ஊழிய பாதையில் நான் சோர்ந்து போனால்

உந்தன் கிருபை என்னை நிரப்பணும்

கிருபையே கிருபையே மாறாத

தேவ கிருபையே

கிருபையே கிருபையே

நாள்தோறும் தாங்கும் கிருபையே

– தாங்கட்டும்