நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சுவிசேஷமா உலக சுகபோகமா

Suviseshamaa Ulaka Sukapokamaa

Chandrasekaran

சுவிசேஷமா உலக சுகபோகமா – 2

இரண்டில் எதுவேண்டும் சொல் மனமே – 2

ஊரோடு மிக

உயர்ந்த மாளிகையுண்டு

உனக்காரோடும் உல்லாச

வாழ்க்கையுண்டு – 2

கூடுவிட்டு உன் ஆவி சென்றால்

எங்கே செல்வாய் சொல் மனமே

உன் கூட வர இவை ஏது உண்டு

வருவதில்லையே மனமே

– சுவிசேஷமா

பொன்னோடும் புகழோடும்

பொருளோடும்

இந்தப் பூமியின் மீது

மகிழ்வுடன் வாழ்ந்தாலும் – 2

பாவத்தின் மீட்பின்றி

மரிப்பாயானால்

எங்கே செல்வாய் சொல் மனமே

நித்திய நரகத்தில் செல்வாயானால்

மீண்டும் வருவதில்லை மனமே

– சுவிசேஷமா