நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே

Suththa Iruthayaththai Sirushtiyumae

Ravi Bharath

சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே

செத்த மனிதனை உயிர்ப்பியுமே

சிக்குண்டு தவிக்கிறேன் உலகினிலே

சீக்கிரம் வந்தென்னை தப்புவியுமே

பாவங்கள் நீங்க என்னை சுத்திகரியும்

அக்கிரமங்கள் நீங்க என்னை கழுவி விடும்

மீறுதல் அறிந்தேன் பாவங்கள் தெரிந்தே

கண்முன்னே பொல்லாகினை நடத்திவிட்டேன்

உம் முன்னே பாவங்களை உடுத்திவிட்டேன்

– சுத்த இருதயத்தை

உள்ளத்தில் உண்மை தன்னை விரும்புகிறீர்

ஞானத்தை என்னிடத்தில் விளம்புகிறீர்

சுத்தகரித்திடும் குற்றம் எரித்திடும்

வெண் மழை என்னை வெண்மையாக்கிடும்

கன்மலை நீர் என்னை தன்மையாக்கிடும்

– சுத்த இருதயத்தை

நல் இதயத்தை என்னுள் சிருஷ்டியுமே

உள் இதயத்தில் ஆவி புதுப்பியுமே

பாவியை தள்ளாதீர் ஆவியை அள்ளாதீர்

இரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்கு தாரீர்

உற்சாக ஆவி என்னை தாங்க செய்குவீர்

– சுத்த இருதயத்தை

வெட்டுண்ட ஆவிதனை ஏற்றுக்கொள்கிறீர்

கட்டுண்ட பாவிதனை ஏற்றிச்செல்கிறீர்

பாவ பழிகளை நீக்கிடும் அய்யனே

பொய்யனை மாற்றும் பரலோக மெய்யனே

எம்பிரித்தும்மை பாடி போற்றிடுவேனே

– சுத்த இருதயத்தை