நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சும்மா நான் இருக்க மாட்டேன்

Summaa Naan Irukka Maattaen

Moses Rajasekar

சும்மா நான் இருக்க மாட்டேன் – நான்

கம்முன்னு கிடக்க மாட்டேன் – 2

ஜம்முன்னு உட்கார மாட்டேன் – நான்

உம்முன்னு இருக்கவும் மாட்டேன் – 2 – ஏனென்னா

இயேசு ராஜா வருக மிக சமீபம் – அதையே

எடுத்துச் சொல்ல ஊரு ஊரா அலைவேன்

– சும்ம நான்

நாடு நகரம் பட்டி தொட்டியினு பார்க்காம – நானும்

நாதன் இயேசு நாமத்தெடுத்துச் சொல்லுவேன் – 2

ஏனன்னா இயேசு ராஜா வருக மிக சமீபம்

– சும்மா

வீடு நிலம் சொத்து வரிசைனு பாக்காம – நானும்

வீதி வீதியா ஓடி சத்யம் சொல்லுவேன் – 2

ஏனன்னா இயேசு ராஜா வருக மிக சமீபம்

– சும்மா

பட்டம் படிப்பு பதவி பெரிசா பாக்காம – நானும்

தியாகமாக ஊழியம் செய்யுவேன் – 2

ஏனன்னா இயேசு ராஜா வருக மிக சமீபம்

– சும்மா