பாடல்
சுமைதாங்கி இயேசு சுமக்கின்ற போது
Sumaithaangi Yesu Sumakkinta Pothu
Moses Rajasekar
சுமைதாங்கி இயேசு சுமக்கின்ற போது
சுமைகளை நீ ஏன் சுமந்திட வேண்டும்
இமை மூடாது உன்னை காக்கிற தேவன்
இருக்கையிலே நீ கலங்குவதேன்
வருத்தி பாரம் சுமக்கும் நீயும்
அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம்
உன்னை தந்திடு
இதயத்தின் பாரம் யார் சொல்லாகும்
யாரிடம் சொன்னால் எந்தன் பாரம் தீரும்
தோளின் மேல் சுமந்து செல்கின்ற நேசர் – 2
அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்
அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்– 3
– வருந்தி
இக்காலபாடுகள் உன்னை என்ன செய்யும்
கர்த்தரின் கரமே உன்னை தாங்கி செல்லும் – 2
ஆலய வாசலின் அழுகின்ற சப்தம் – 2
ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் நித்தமும்
ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் நித்தமும் – 3
– வருந்தி