நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சுகம் தந்தவரே ஸ்தோத்திரம்

Sukam Thanthavarae Sthoththiram

சுகம் தந்தவரே ஸ்தோத்திரம்

பெலம் தந்தவரே ஸ்தோத்திரம்

நன்மைகள் செய்தவரே ஸ்தோத்திரம்

நாள்தோறும் காத்தவரே ஸ்தோத்திரம்

உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம்

உமக்கே ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம் – 2

என்னை அறிவார் ஒருவரும் இல்லையென்று கதறினேன்

என்னை விசாரிக்க ஒருவரும் இல்லையென்று புலம்பினேன்

சுகம் தந்தீர் பெலன் தந்தீர் நன்மை செய்தீர் ஸ்தோத்திரம்

– உமக்கே ஸ்தோத்திரம்

என்னை தாங்கிட ஒருவரும் இல்லையென்று தயங்கினேன்

என்னை தேற்றிட ஒருவரும் இல்லையென்று கலங்கினேன்

சுகம் தந்தீர் பெலன் தந்தீர் நன்மை செய்தீர் ஸ்தோத்திரம்

– உமக்கே ஸ்தோத்திரம்

என்னை நேசிக்க ஒருவரும் இல்லையென்று ஏங்கினேன்

என்னை வழி நடத்த ஒருவரும் இல்லையென்று பதறினேன்

சுகம் தந்தீர் பெலன் தந்தீர் நன்மை செய்தீர் ஸ்தோத்திரம்

– உமக்கே ஸ்தோத்திரம்