நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே

Sthoththiramae Sthoththiramae

Ravi Bharath

ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே

அப்பா அப்பா – உம் கிருபை

எனக்குப் போதும் அப்பா அப்பா

வல்லவரே நல்லவரே

வல்லவரே நல்லவரே

வல்லவரே நல்லவரே (3)

கர்த்தரே என் கன்மலையும்

கோட்டையுமானார்

இரட்சகரும் தேவனுமானார் – நான்

நம்பின என் துருகமும் கேடகமானார்

என் இரட்சண்யக் கொம்புமானார்

நல்லவரே வல்லவரே – 2

– ஸ்தோத்திரமே

தேவரீர் என் இருளையெல்லாம்

வெளிச்சமாக்கினீர்

எனது விளக்கை ஏற்றி வைத்தீர்

ஒரு சேனைக்குள்ளே

பாய்ந்து போரிடச் செய்தீர்

மதிலையெல்லாம் தாண்டிடச்செய்தீர்

நல்லவரே வல்லவரே – 2

– ஸ்தோத்திரமே

உம்முடைய வலக்கரத்தால்

என்னைத் தாங்கினீர் – உம்

காருண்யத்தால் பெரியவனானேன்

நான் செல்லுகின்ற

பாதையெல்லாம் அகலமாக்கினீர்

வழுவாமல் நடந்து செல்கின்றேன்

நல்லவரே வல்லவரே – 2

– ஸ்தோத்திரமே