நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே

Sthoththiram Sthoththiram Yesuvukkae

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

இயேசுவுக்கே துதி

சாற்றிடுவோம் என்றுமே

சேற்றிலிருந்தெம்மை மீட்டெடுத்தென்றும்

ஆற்றியே தேற்றுவதால்

இன்ப இயேசுவின் திவ்ய நாமத்தை

துன்பம் சூமும் எவ்வேளையிலும்

நன்றியோடு நாம் பாடிடுவோம்

தண்ணீரைக் கடந்திடும் வேளையிலும்

அவர் நம்மோடு இருப்பேன் என்றார்

அக்கினி சூளையில் நடந்திடும் வேளையிலும்

விக்கினம் சூழாதென்றார்

– இன்ப இயேசுவின்

கஷ்டங்கள் நஷ்டங்கள் சூழ்ந்திடும்

வேளையில் சோர்ந்திடா பெலன் அளிப்பார்

நாளும் நம் குறைகள் யாவையும் கண்டு

நல்குவேன் கிருபை என்றார்

– இன்ப இயேசுவின்

திகையாதே கலங்காதே என்றுரைத்தார்

அவர் திக்கற்றோராக விடார்

பயப்படாதே சிறுமந்தையே என்றழைத்தார்

பாரில் நம் மேய்ப்பனவர்

– இன்ப இயேசுவின்

சிங்கத்தின் குட்டிகள் தாழ்ச்சியடைந்தாலும

பங்கம் வராது காப்பார்

நம்மையே மீட்கவே தம்மையே ஈந்து

தரணியில் மாண்டுயிர்த்தார்

– இன்ப இயேசுவின்

சீயோனின் ராஜனாய் சீக்கிரம் வந்துமே

சீயோனில் சேர்ந்திடுவார் –

மன்னவன் இயேசுவை சந்திக்கும் அந்நாளில்

மகிமையின் சாயல் அணிவோம்

– இன்ப இயேசுவின்