ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு
Sthoththiram Pannna En Upaththiram Pochchu
Moses Rajasekar
ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு
துதிச்சுப் பாடினேன் என் தரித்திரம் போச்சு – 2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
நான் ஆடிப் பாடுவேன் – 2
அல்லேலூயா சொன்னதால்
அல்லல் நீங்கிப் போச்சு
உள்ளமெல்லாம் இன்பத்தாலே
பொங்கி எழிலாச்சு – 2
ஆண்டவரை அழைச்சதாலே
ஆபத்து நீங்கிப் போச்சு – 2 அவரை
வேண்டி வேண்டி துதிச்சதாலே
வேதனை நீங்கிப் போச்சு – 2
– ஸ்தோத்திரம்
தேவனே என்றதாலே தேவை நிறைவாச்சு
கர்த்தாவே என்றதாலே
கட்டுகள் உடைஞ்சிப் போச்சு – 2
வல்லவரே என்றதாலே
வல்லமை கிடைக்கலாச்சு – 2
நல்லவரே என்றதாலே
நன்மை கிடைக்கலாச்சு – 2
– ஸ்தோத்திரம்
அன்பரே என்றதாலே அன்பு அதிகமாச்சு
நண்பரே என்றதாலே நட்பு நெருங்கிப் போச்சு – 2
இன்பரே என்றதாலே இதயம் பூரிப்பாச்சு – 2
உன்னதரே என்றதாலே உள்ளம் நிறைவாச்சு – 2 –
– ஸ்தோத்திரம்