நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஸ்திரிகளுக்குள் ரூபவதியே

Sthirikalukkul Roopavathiyae

Moses Rajasekar

ஸ்திரிகளுக்குள் ரூபவதியே

தண்ணீர்மொள்ள வந்தவளே – ஓஹோ.. ஹோ

கானானின் மானே – என்

எஜமானின் தேனே – நி

கண் கவரும் புள்ளிமானே

அழகிற் சிறந்தவரின் அழகை ரசிக்க வந்த

அழகு மணவாட்டியே – உன்

உள்ளழகின் கனிகளை ரசித்து ருசித்திடும்

மணவாளன் நான் தானே (2)

உன் பற்களின் நடுவே வரும்

பொற்கால துதிகளுக்கு – மயங்கும் மன்னன் நானே

உன் சொற்களின் கோர்வையால்

அழகு துதி தந்து என்னை நீ கவர்ந்தாயே (2)

– ரூபவதியே

சித்திரதையலாடை முத்திரை மோதிரம்

அணிந்து வருபவளே

உன் நித்திரை மயக்கத்தில்

நேசரின் மார்பினில் சாய்ந்து மகிழ்பவளே (2)

இத்தரை மீதினில் அத்துரை தேவனை

பாடி மகிழ்பவளே

உன் உத்தம புத்திரத்தில் நேசரின்

இதயத்தில் இடம் பெற்று மகிழ்ந்தாயே –

– ரூபவதியே