பாடல்
சோர்ந்து போகாதே மனமே
Sornthu Pokaathae Manamae
சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே (போராட)
கண்டுன்னை அழைத்த தேவன்
கைவிடுவாரோ(2)
வாக்களித்த தேவனை நீ
பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னை
தாங்க மன்றாடு
– சோர்ந்து போகாதே
துன்பங்கள் தொல்லைகள் உன்னை
சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னை தேற்றும் நேரம்
ஆனந்தமல்லோ
– சோர்ந்து போகாதே
சோதனைகளை சகிப்போன்
பாக்கியவானல்லோ
ஜீவ கிரீடம் சூடும்
நேரம் என்ன பேரின்பம்
– சோர்ந்து போகாதே