சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது
Sooriyan Marainthu Anthakaaram Soolnthathu
சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது
சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது (2)
சோர்ந்த என் தேகம் அயர்ந்துமே
இளைப்பாறப் போகுது – தூயா
கிருபை கூர்ந்து காருமையா
பகல் முழுவதும் பட்சமாய்
என்னைப் பாதுகாத்தீரே
பகல் முழுவதும் பட்சமாய்
என்னைப் பாதுகாத்தீரே (2) – சகல
தீமையுமகல வைத்தருள் நலமும் தந்தீரே
சுவாமி உந்தன் பாதம் பணிகிறேன்
– சூரியன் மறைந்து
பாதகம் மிக புரிந்தேன் பரம நாயகா
பாதகம் மிக புரிந்தேன் பரம நாயகா (2)
பாவி நானிந்த நாளிலும்
பல தீவினை செய்தேனையா
கோபமின்றி என் பாவம் பொறுத்திடுவாய்
– சூரியன் மறைந்து
ராவில் வரும் மோசமொன்றும் என்னை
சேராமல்
ராவில் வரும் மோசமொன்றும் என்னை
சேராமல் (2) –
பேயின் சர்ப்பனை தீய சொப்பனம்
மனதில் நேராமல்
நேயா நின் நல் தூதர் காவல் தா
– சூரியன் மறைந்து
ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்
ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்(2)
அப்பனுன் கையிலொப்புவித்து
நான் அயர்ந்து தூங்குவேன்
ஐயனே உன் பொன்னடி சரணம்
– சூரியன் மறைந்து