நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சொல்லால் ஆகுமா இதைச் சொன்னால் புரியுமா

Sollaal Aakumaa Ithaich Sonnaal Puriyumaa

Moses Rajasekar

சொல்லால் ஆகுமா இதைச்

சொன்னால் புரியுமா – என

இயேசு ராஜன் புகழைச்

சொன்னால் உலகம் தாங்குமா

முக்கோடி எழுந்தாலும்

தக்கி முக்கி எழுதினாலும்

முன்னவன் புகழ்தனையே

எழுதிட முடியுமா

– சொல்லால்

மரித்தவன் வீட்டை மிதித்த தேவன்

நீர்த்த உயிரை உயிர்க்கு தந்தார்

கதறினா குருடனின் கண்களைத் திறந்து

வாழ்வை ஒளிமயமாக்கின தேவன்

– சொல்லால்

பன்னிரண்டு வருடம் படுக்கையில் கிடந்த

பாதக ஸ்திரீயின் பாடதைப் போக்கின

பாடையில் சுமந்து வந்த பாதக செல்வனின்

பாடையத் தொட்டு உயிருடன் எழுப்பினதை

– சொல்லால்

கவலை கண்ணீரோடு கடந்து வந்திடும்

யாரையும் வெறுக்காது தள்ளாத தேவன்

வாடி நின்றிடும் மக்களின் குறளுக்கு

வார்த்தையை அனுப்பி

சுகம் தர வல்லவர் அவர்

– சொல்லால்