சிட்டுக்குருவி காட்டுக்குருவி பாட்டுப் பாடுது
Sittukkuruvi Kaattukkuruvi Paattup Paaduthu
Moses Rajasekar
சிட்டுக்குருவி காட்டுக்குருவி பாட்டுப் பாடுது
காட்டுக்குருவி வீட்டுக்குருவி தாளம் போடுது – ஏ …. – 2
கன்னிமரி மடியினிலே கண்ணின் மணி தவழுது – 2
இதை காண வான ஞானவான்கள் கூட்டம் வந்திருக்கு
இதை காண காணான் மேய்ப்பர்களின் கொண்டாட்டம்
அங்கிருக்கு – 2
தாலேலோ ஓஹோ தாலேலோ தய்யரதய்யா – 2
சத்திரத்தின் நடுவினிலே சரித்திர நாயகன் – 2
நித்திரை கொள்வதுதான் எத்தனை எத்தனை அழகோ – 2
உன்னதத்தில் மகிமையும் பூமியிலே சமாதானமும் – 2
மனுஷர் மேல் பிரியமும் உண்டாகட்டும் – 2
– தாலேலோ
கானகுயில் கூவுது கண்ணின் மணி அழுகுது – 2
கன்னிமரி தாலாட்டில் தவழ்ந்து தவழ்ந்து நடக்குது
தங்க தொட்டில் தாலாட்டு தரணியிலே சீராட்டு
அன்பு தெய்வம் பாலகனாய் ஓடி ஆடும் விளையாட்டு
– தாலேலோ
கன்னிமரி பாலகனே மண்ணில் வந்த மன்னவனே – 2
முன்னனை மீதமர்ந்த சின்ன குமாரனே – 2
மண்டியிட்டு கை கூப்பி மன்னவனே உம்மை வாழ்த்தி – 2
அண்டிவந்தோம் நன்னவனே எங்கள் அன்பு தெய்வமே – ...சிட்டுக்குருவி