பாடல்
சின்னஞ்சிறு பாலகன் பெத்லகமில் பிறந்துதித்தார்
Sinnanjitru Paalakan Pethlakamil Piranthuthiththaar
Bishop Gnanaprakasam
சின்னஞ்சிறு பாலகன் பெத்லகமில் பிறந்துதித்தார்
கன்னியின் வயிற்றிலே கர்த்தர் இயேசு பிறந்துதித்தார்
தீர்க்க தரிசியாய் சொன்னவர் பிறந்துதித்தார்
இம்மானுவேலனாய் நம்மோடு இருந்திட,
கூடவே இருந்திட பெயரோடு பிறந்துதித்தார்
எல்லோரையும் மீட்கும் பொருளாய் இயேசு பிறந்துதித்தார்
மனுக்குலத்தின் பாவத்தை போக்கிட பிறந்துதித்தார்
மாட்டுத்தொழுவிலே இயேசு மனுவாய் பிறந்துதித்தார்
– சின்னஞ்சிறு
அகிலத்தை ஆளும் பிரபுவாய் ஆண்டவர் பிறந்துதித்தார்
அழிந்திடும் மாந்தரை மீட்டிட பிறந்துதித்தார்
அன்பின் ரூபமாய் இயேசு மனுவாய் பிறந்துதித்தார்
– சின்னஞ்சிறு
பரலோகில் நம்மை சேர்க்க பாலனாய் பிறந்துதித்தார்
பரமனின் சித்தம் செய்ய பாரினில் பிறந்துதித்தார்
பரிகார வழியாக இயேசு மனுவாய் பிறந்துதித்தார்
– சின்னஞ்சிறு