நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்

Singak Kuttikal Pattini Kidakkum

Fr. S. J. Berchmans

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்

ஆண்டவரைத் தேடுவோர்க்கும் குறையில்லையே

குறையில்லையே குறையில்லையே

ஆண்டவரைத் தேடுவோர்க்கும் குறையில்லையே

புல்லுள்ள இடங்களிலே

என்னை மேய்க்கின்றார்

தண்ணீரண்டை கூட்டிச் சென்று

தாகம் தீர்க்கின்றார்

– சிங்கக்

எதிரிகள் முன் விருந்தொன்றை

ஆயத்தப்படுத்துகின்றார்

என் தலையை எண்ணெயினால்

அபிஷேகம் செய்கின்றார்

– சிங்கக்

ஆத்துமாவை தேற்றுகின்றார்

ஆவி போழிகின்றார்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்

கிருபை என்னைத் தொடரும்

– சிங்கக்

என் தேவன் தம்முடைய

மகிமை செல்வத்தினால்

குறைகளையே கிறிஸ்துவுக்குள்

நிறைவாக்கி நடத்திடுவார்

– சிங்கக்