நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சிலுவையின் நிழலில்

Siluvaiyin Nilalil

சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்

சாய்ந்திளைப் பாறிடுவேன் - ஆ.. ஆ..

சிலுவையின் அன்பின் மறைவில்

கிருபையின் இனிய நிழலில்

ஆத்தும நேசரின் அருகில்

அடைகிறேன் ஆறுதல் மனதில்

பாவ பார சுமையதால் சோர்ந்து

தளர்ந்த என் ஜீவியமே - ஆ ஆ

சிலுவையண்டை வந்ததினால்

சிறந்த சந்தோஷங் கண்டதினால்

இளைப்படையாது மேலோகம்

ஏகுவேன் பறந்தே வேகம்

– சிலுவையின்

எவ்விதக் கொடிய இடறுக்கும் அஞ்சேன்

இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ ஆ

அவனியில் வியாகுலம் வந்தால்

அவரையே நான் அண்டிக்கொண்டால்

அலைமிக மோதிடும் அந்நாள்

ஆறுதல் அளிப்பதாய் சொன்னார்

– சிலுவையின்

இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன்

இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ ஆ

திருமறை இன்னிசை நாதம்

தேனிலும் இனிய வேதம்

தருமெனக்கானந்த சந்தோஷம்

தீர்க்குமென் இதயத்தின் தோஷம்

– சிலுவையின்