பாடல்
சேனையின் கர்த்தரே சியோனின் ராஜனே
Senaiyin Karththarae Siyonin Raajanae
Sirkali Yesuprakasam
சேனைகளின் கர்த்தரே சியோனின் ராஜனே
ஜோதி மயமானவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் – 2
– சேனையின்
தூதர்கள் போற்றும் தூயவரே துதிகளின் மத்தியின் வாழ்பவரே
தேவாதி தேவனே ஸ்தோத்திரம் திரியேக நாதனே ஸ்தோத்திரம்
– பரிசுத்தர்
ஒருவரும் சேரக்கூடா ஒளியினிலே வாசம் செய்யும் வல்லவரே
உன்னத தேவனே ஸ்தோத்திரம் ஒப்பற்ற நேசரே ஸ்தோத்திரம்
– பரிசுத்தர்
மகிமை மகத்துவம் ஆனவரே மாறாத அன்பு நேசரே
மீட்பரே மேய்ப்பரே ஸ்தோத்திரம் மேசியா நேசரே ஸ்தோத்திரம்
– பரிசுத்தர்