நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சேனைகளின் தேவனே உமது வாசஸ்தலம்

Senaikalin Thaevanae Umathu Vaasasthalam

Lucas Sekar

சேனைகளின் தேவனே

உமது வாசஸ்தலம்

எத்தனை நன்மையும்

எத்தனை இன்பமுமாய் இருக்கிறது

எங்கள் சேனைகளின் தேவனே (2)

பூமி நோக்கி நான் பார்த்தேன்

உம்மைப்போல ஒரு தெய்வம்

பூமியிலே கண்டதில்லை (2)

வானம் கொள்ளாதவர் –

இயேசு பூமி கொள்ளாதவர் (2)

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று

வாழ்நாளெல்லாம் நான் பாடுவேன்

– சேனைகளின்

ஜோதிகளின் தேவனே

நன்மையான ஈவுகளை

நாள்தோறும் தருபவரே – (2)

எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே (2)

தடைகளை உடைத்து கட்டுகளை அறுத்து

அனுதினம் என்னைக் காப்பவர்

– சேனைகளின்

பட்சிக்கிற அக்கினியே

தீமைகளைப் பாராத

சுத்த தெய்வம் நீரய்யா- (2)

வானம் சிங்காசனம் பூமி பாதபடி (2)

அகிலமே போற்றுது போற்றுது போற்றுது

உன்னத தேவனே

– சேனைகளின்