நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சேனைகளின் தேவனாகிய

Senaikalin Thaevanaakiya

Ravi Bharath

சேனைகளின் தேவனாகிய

கர்த்தரின் நாமத்தில் வருகிறேன்

சர்வவல்ல தேவனாகிய

கர்த்தரின் நாமத்தில் யுத்தம் புரிகிறேன்

வெற்றி முழக்கம் அது எங்கள் பழக்கம்

கர்த்தர் நாமமே தீமைகள் விலக்கும்

பட்டயத்தை நம்பவில்லையே – என்

வில்லையும் நான் நம்பவில்லையே

உம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன்

வாக்குத்தத்தம் பற்றிக் கொண்டேன்

வெட்கப்பட்டுப் போவதில்லையே

உம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன்

வாக்குத்தத்தம் பற்றிக் கொண்டேன்

வெட்கப்பட்டுப் போவதில்லையே

– வெற்றி முழக்கம்

மாம்சத்தோடு சண்டையில்லையே – இங்கு

இரத்தத்தோடு சண்டையில்லையே

இந்த பூலோகத்தின் அதிபதியோடும்

பொல்லாத ஆவிகளோடும்

அன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன்

இந்த பூலோகத்தின் அதிபதியோடும்

பொல்லாத ஆவிகளோடும்

அன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன்

– வெற்றி முழக்கம்

என்னைக் கீழே தள்ளி விட்டானே

சத்ரு ஊர் முழுதும் தூற்றி விட்டானே

என் தேவன் என்னை தூக்கிவிட்டானே

நிந்தைகளை மாற்றிவிட்டார்

சாம்பலெல்லாம் சிங்காரம் இன்றே

என் தேவன் என்னை தூக்கிவிட்டானே

நிந்தைகளை மாற்றிவிட்டார்

சாம்பலெல்லாம் சிங்காரம் இன்றே

– வெற்றி முழக்கம்