நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சேனைகளின் ஆண்டவரே உமக்கே ஆராதனை

Senaikalin Aanndavarae Umakkae Aaraathanai

Reegan Gomez

சேனைகளின் ஆண்டவரே

உமக்கே ஆராதனை

சேதமின்றி காப்பவரே

உமக்கே ஆராதனை

யுத்தங்களை எனக்காய் செய்தவரே

சத்துருவை வல்லமையாய் வென்றவரே

ஜெயத்தை தந்த ஜெய வீரரே

உமக்கே ஆராதனை என்றும்

உமக்கே ஆராதனை

– சேனைகளின்

சேனைக்குள் பாய்ந்திட பெலனளித்தீர்

மதிலை தாண்டிட வல்லமை தந்தீர்

வெற்றியை தந்த ஜெய வீரரே

உமக்கே ஆராதனை என்றும்

உமக்கே ஆராதனை

– சேனைகளின்

எதிரியின் மீது ஜெயம் அளித்தீர்

உம் புகழை தினம் பாட வைத்தீர்

விடுதலை தந்த ஜெயவீரரே

உமக்கே ஆராதனை என்றும்

உமக்கே ஆராதனை

– சேனைகளின்