பாடல்
சேனைகளின் ஆண்டவரே உம் சமூகம் எத்தனை இன்பம்
Senaikalin Aanndavarae Um Samookam Eththanai Inpam
Reegan Gomez
சேனைகளின் ஆண்டவரே
உம் சமூகம் எத்தனை இன்பம்
என் தேவனே என் ராஜனே
புகலிடம் நீர்தானையா
என் உள்ளத்தின் வாஞ்சை நீரே
இதய ஏக்கம் நீரே
– சேனைகளின்
உம் பீடத்தின் அருகினிலே
இடமொன்று கிடைத்ததினால்
குருவிகளும் தங்கிடுதே
களிகூர்ந்து மகிழ்ந்திடுதே
– சேனைகளின்
கண்ணீரெல்லாம் நீங்குதையா
கவலைகள் மறையுதையா
புதிய பெலன் புதுகிருபை
பனிபோல் இறங்குதையா
– சேனைகளின்
உம் இல்லத்தின் வாசலிலே
காவலன் போல் அமர்வேன்
வேறிடமோ நான் செல்வதில்லை
உம் பீடம் சுற்றி வருவேன்
– சேனைகளின்