பாடல்
சீரார் விவாகம் ஏதேன் காவிலே
Seeraar Vivaakam Aethaen Kaavilae
சீரார் விவாகம் ஏதேன் காவிலே
நேராய் அமைத்த தேவ தேவனே
தாராய் மன்றலாசியே
வாராய் சுபம் சேரவே
நேயனே மகா தூய தேவ தேவனே
சீர்மேவும் மெய்மனாசி நீ தரவா
நேயனே மகா தூய தேவ தேவனே
சீர்மேவுமே ஆசிதா
– நேயனே
மங்கள மணமகன் … அவர்களுக்கும்
மங்கள மணமகள் ……. அவர்களுக்கும்
இயேசு தேவ தயவாய்
பாசத் துணை சேர்த்துவை
– நேயனே
நாடோறும் செல்பாதை தீபமாய்
நாடு உயர்ந்த வேத நூலதை
தேடித் துணைகொண்டன்பாய்
நீடித்தும்மைத் தேடிட (நீடித்தவர் வாழ்ந்திட)
– நேயனே
ஆன்றோர் எந்நாளும் போற்றும் சேயரும்
வானோர் சிறந்த கல்வி செல்வமும்
சான்றோர் போற்றும் நேசரும்
தோன்றித் திகழ சீரருள்
– நேயனே
வாழ்க வாழ்க என்றும் இம்மணர்
வாழ்க இலங்கும் தந்தை தாயாரும்
வாழ்க சுற்றத்தார் அன்பர்
வாழ்க சுப மன்றலும்
– நேயனே