நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சத்துரு விழுந்தானே

Saththuru Vilunthaanae

Lucas Sekar

சத்துரு விழுந்தானே

உன் பாதங்களின் கீழே

புது எண்ணெயால் அபிஷேகம்

உன் பாத்திரம் நிரம்பும் (2)

பெரும் பந்தியின் நடுவிலே

உன் தலையை உயர்த்துவார்

நீதியின் சால்வையாலே

உன்னை மூடுவார்

நீ உயருவாய், நீ படருவாய் (2)

உன் தேசம் வாழுமே

நீ ஓங்கி வளருவாய்,

நீ பூத்து குலுங்குவாய்

நீ பூமியை நிரப்புவாய், ஓ, ஓ, ஓ,

– சத்துரு விழுந்தானே

யுத்தங்களை நடப்பிக்கும்

சர்வ வல்ல தேவன்

கூர்மையான பட்டயமாய்

உன்னை என்றும் மாற்றுவார்

கன்மலையின் வெடிப்பிலே

உன்னை மூடுவார்

பலவானின் கையில் உள்ள

அம்பாய் மாற்றுவார்

நீ மலையின் மேல்

உள்ள பட்டணமாய் (2)

இனி மறைவது இல்லையே

நீ உலகத்தின் வெளிச்சமே,

நீ பூமியின் சாட்சியே ஏ ஏ ஏ

சத்துரு விழுந்தானே