நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே

Saththiyamum Jeevanumaay Niththamumae

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே

வாழ்ந்திடும் – கர்த்தனே

எங்கட்கு கரம் தந்து என்றும் தாங்கிடும்

சுத்தமாய் நடப்பதற்கு சுத்த ஆவி தந்திடும்

சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும்

வானம் திறந்தருளும் பல

தானங்களையிந் நேரமதில்

வானவனே ஞானமுள்ள

வல்ல குருநாதனே – தேனிலும்

மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள்

என்னை முற்றும் மாற்றிட

உன்னத பெலனீந்திடும்

இன்னும் ஈசனேயும் நல்வரங்களீந்திடும்

கண்ணிகளில் சிக்கிடாமல்

கண்மணி போல் காத்திடும்

கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே

– வானம் திறந்தருளும்

சுய ஆடம்பரம் முற்றும்

சுட்டெரிக்க வேணுமே

தயவு தாழ்மையினாவி தந்தருள வேணுமே

மாயமான யாவினின்றும்

மனமதை பேணுமே

ஆயனே அடியார்களின் அடைக்கலமே

– வானம் திறந்தருளும்

அதிகமதிமன்பில்

அமிழ்ந்து அனுதினம்

புதிய நாவுகளாலும் புகழ்ந்தும்மைப் போற்றிட

அதிசயமே அகத்தின்

குறைகளகற்றியே

இது சமய முன்னத பெலனீந்திடும்

– வானம் திறந்தருளும்