நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சத்தியம் மணக்கும் உத்தம தேவ

Saththiyam Manakkum Uththama Thaeva

Sirkali Yesuprakasam

சத்தியம் மணக்கும் உத்தம

தேவ சாலேமின் ராஜாவே

சாந்தமும் தாழ்மையும் உள்ளவரே எங்கள்

சாபங்கள் பாவங்கள் சுமந்தவரே

நெஞ்சின் புண் ஆற நிம்மதி சேர

நேசர் என் இயேசுவே நின் அடி பணிந்தோம்

தஞ்சம் என்போர்க்கும் தாயகம் நீரே

தாங்கிடும் நல்ல புயமுடையோரே

– சத்தியம்

என் உயிர் நரம்பிலும் கிருபையின் நாதம்

இரவும் பகலும் நீர் என் சங்கீதம்

என்பான் நாள் வரை இதுவே போதும்

என் மனம் நாவும் உம்மையே ஓதும்

– சத்தியம்