சத்திய வேதம் தந்த உத்தமர் இயேசுவுக்கு
Saththiya Vaetham Thantha Uththamar Yesuvukku
சத்திய வேதம் தந்த
உத்தமர் இயேசுவுக்கு
ஜதிகள் சொல்லிப் பாடுவேன்
சங்கீதம் நான் பாடா சரீரம் தந்தவர்க்கு
ஸ்வரங்களின் மலர் சூடுவேன் – நான்
ஸ்வரங்களின் மலர் சூடுவேன்
வேதமானது தேவன் தந்தது
தேவ வார்த்தைகள் நிரைந்தது
அந்த வார்த்தை தான் இயேசுவானது
எந்தன் நாவினில் ஒலிப்பது – பாவி என்னை
அவர் பக்தனாக துதி பாடிட வைத்தது
பக்தர்களின் பாதைக்கு நல்ல தீபம் அது
பாவமில்லாத தேவ ஆட்டுக்குட்டி
பரிசுத்தர் சொன்னது – பக்தியோடு இந்த
வேதம் படிப்பவர்க்கு பரலோகம் உள்ளது
– சத்திய வேதம் தந்த
வேதப் பிரியரை தேவப் புதல்வரை
சேதமடையாது காப்பது – இரவும்
பகலும் இதை தியானம் செய்பவர்க்கு
இனிய வாழ்க்கையைக் கொடுப்பது
இம்மானுவேல் என்றும் நம்முடன் இருப்பது
இம்மட்டும் உதவி செய்யும் எபெனேசர் அது
இந்த வேதம் தந்த வேத
நாயகனை எப்படி பாடுவேன்
ஸப்த ஸ்வரங்கள் இசையோடு
ஒலிக்க ஏழை நான் பாடுவேன்
– சத்திய வேதம் தந்த