பாடல்
சர்வ அங்க தகனபலி
Sarva Anga Thakanapali
Moses Rajasekar
சர்வ அங்க தகனபலி – எங்கள்
சர்வ வல்ல தேவனுக்கு
உதடுகளின் ஸ்தோத்திர பலி –
எங்கள் உன்னத நல் ராஜனுக்கு
ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி
ஸ்தோத்திர பலி நான் செலுத்தும் பலி
அசைவாட்டும் ஜீவபலி – எங்கள்
அசைவாடும் தேவனுக்கு
பிசைந்த மாவின் ஓர் மெல்லிய பலி
எங்கள் மெல்லிய நல் ராஜனுக்கு
– ஸ்தோத்திரபலி – 2
என் சமாதான ஜீவபலி – எங்கள்
சமாதான தேவனுக்கே
இடித்து பிழிந்தே திராட்சை ரசத்தின் பலி
என்னை நடத்திடும் தேவனுக்கு
– ஸ்தோத்திர பலி
என் கைகளின் காணிக்கைபலி – என்னை
வாழ வைக்கும் தேவனுக்கு
என் ஆவி ஆத்ம சரீர பலி – என்னை
ஆளுகின்ற தேவனுக்கு
– ஸ்தோத்திர பலி – 3