நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சந்தோஷமாயிருக்க

Santhoshamaayirukka

Pastor K. S. Wilson

சந்தோஷமாயிருக்க – எப்பொழுதும்

சந்தோஷமாயிருங்க

உயர்வானாலும் தாழ்வானாலும்

சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்

நெருக்கத்தின் நேரத்திலும்

கண்ணீரின் பாதையிலும்

நம்மைக் காண்கின்ற தேவன்

நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

– சந்தோஷமாயிருக்க

விசுவாச ஓட்டத்திலும்

ஊழியப் பாதையிலும்

நம்மை வழிநடத்தும் தேவன்

நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

– சந்தோஷமாயிருக்க

தோல்விகள் வந்தாலும்

நஷ்டங்கள் வந்தாலும்

நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன்

நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

– சந்தோஷமாயிருக்க

என்னதான் நேர்ந்தாலும்

சோர்ந்து போகாதீங்க

நம்மை அழைத்த தேவன்

கைவிட மாட்டார் சந்தோஷமாயிருங்க

– சந்தோஷமாயிருக்க