பாடல்
சகாயம் செய்யும் கன்மலையே
Sakaayam Seyyum Kanmalaiyae
Reegan Gomez
சகாயம் செய்யும் கன்மலையே
சரணடைந்தேன் உம் சந்நிதி
தேவா சரணம் சரணம்
இயேசு ராஜா சரணம் சரணம்
கை தூக்கி எடுத்தீரே
கானங்களால் புகழ்வேன்
சஞ்சலம் மாற்றினீர்
சந்தோஷம் அளித்தீர்
சங்கீதங்கள் பாடுவேன்
நன்றி இயேசு ராஜா
சரணம் இயேசு ராஜா
– சகாயம்
எதைக்குறித்தும் கலக்கமில்லை
எபிநேசர் இருப்பதினால்
கருவில் கண்டவர் கைவிடமாட்டீர்
காலமெல்லாம் போதும் நீரே – நன்றி
– சகாயம்
வாழ்க்கை பயணத்திலே
துணையாக வருபவரே
காற்று வீசட்டும் கடலும் பொங்கட்டும்
கரை சேர்க்கும் தெய்வம் நீரே - நன்றி
– சகாயம்