பாடல்
சாலேம் ராஜா சாரோன் ரோஜா
Saalaem Raajaa Saaron Rojaa
Ravi Bharath
சாலேம் ராஜா சாரோன் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீர் – சிங்காசனம்
வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர்
தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமே
என்னுள்ளத்தில் வாருமே
ஆமென் ஆமென் ஆமென்
பேரான ந்தம் உம் பிரசன்னம்
மாறாதது உந்தன் வசனம்
கேருபீங்கள் உம் வாகனம்
உம் சரீரமே என் போஜனம்…
பூலோகத்தின் நல் ஒளியே
மேலோகத்தின் நல் வழியே
பக்தரைக் காக்கும் வேலியே
குற்றம் இல்லாத பலியே
– சாலேம் ராஜா
நீர் பேசினால் அது வேதம்
உம் வார்த்தையே பிரசாதம்
உம் வல்ல செயல்கள் பிரமாதம்
போதும் போதும் நீர் போதும்…
கண்ணோக்கி எம்மைப் பாரும்
இமை விலக்கி என்னைக் காரும்
இன்றே எம் பந்தியில் சேரும்
வாரும் நீர் விரைவில் வாரும்
– சாலேம் ராஜா