பாடல்
ரோட்டுபுற வீட்டுல ஒதுக்குப்புற திண்னையிலே
Rottupura Veettula Othukkuppura Thinnnaiyilae
Moses Rajasekar
ரோட்டுபுற வீட்டுல
ஒதுக்குப்புற திண்னையிலே
ஒரு பாட்டு ஒண்ணு கேக்குதடி
செல்லம்மா அந்த பாட்டை கேட்டு
திகைச்சுப்புட்டேன் சின்னம்மா – 2
என்னம்மா பாடுறாங்க செல்லாம்மா
நின்ன காலு பின்னி போச்சு சின்னம்மா
நம்மை காக்கும் தெய்வம் – நம்மை
நடத்தும் தெய்வம் இயேசுதான்னு
சொல்றாங்க சின்னம்மா – ரோட்டு
வாழ்க்கையில நிம்மதியில்ல சின்னம்மா – பல
துன்பங்கள் அனுபவிக்கிறேன் செல்லம்மா – 2
என்னால தாங்க முடியல இதில்
மீள முடியல – 2
இயேசுவிடம் ஓடி வந்தேன் செல்லம்மா – 2
– ரோட்டு
காத்து கருப்பு மாய மந்திரம் சின்னம்மா
இராத்திரியிலே தூக்கம் வரல் செல்லம்மா – 2
தீய சக்திகளை அழிக்கும் தெய்வம் – 2
இயேசுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன்
செல்லம்மா இனி அவரையே
நம்பி வாழ்வோம் சின்னம்மா – ரோட்டு