நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ

Rojaappoo Vaasamalarkal Naam Ippo

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ

நேச மணாளன் மேல் தூவிடுவோம்

மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி

மெல்லிய சேர்ந்து அள்ளியே வீசி

நல் மணவாளன் நேசிக்க

எல்லா மலரையும் தூவிடுவோம்

– ரோஜாப்பூ

மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள

பெண்ணுடன் அன்பிலும் பேர்பெற்று

ஒன்றித்துவாழ ஆண்டவர் ஆசீர்வதிக்க

வேண்டுதலோடு தூவிடுவோம்

– ரோஜாப்பூ

புத்திர பாக்கியம் புகழுடன் வாழ்வும்

சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்

நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்

பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம்

– ரோஜாப்பூ

கறை திரையற்ற மணவாட்டி சபையை

இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்

மங்கள நாளை எண்ணியே

இந்த மணாளன் மேல் தூவிடுவோம்

– ரோஜாப்பூ