ராஜரீக கெம்பீர தொனியோடே
Raajareeka Kempeera Thoniyotae
ராஜரீக கெம்பீர தொனியோடே
ராஜ ராஜனை தேவ தேவனை
வெற்றியோடு பாடி பக்தியோடு நாடி
வீர சேனைக் கூட்டமாக சேவிப்போம்
மெய் சீஷராக இயேசுவின் பின் செல்லுவோம்
முற்றும் முடிய வெற்றியடைய – சற்றும்
அஞ்சிடாமல் இயேசு நாமத்தில் – சாத்தானை
தோற்கடித்து மேற்கொள்ளுவோம்
சூலமித்தி இரண்டு சேனைக் கொப்பாய்
சூரியனைப் போல் சந்திரனைப் போல்
கொடிகள் பறக்க சாட்சிகள் சிறக்க
கீதம் பாடி ஜெயம் பெற்று செல்கின்றாள்
– மெய் சீஷராக
செங்கடல் நடுவிலே நடத்தினார்
எங்கள் ஆண்டவர் சர்வ வல்லவர்
கடலைப் பிளந்து நதியைப் பிரித்து
காய்ந்து நிற்கும் பூமியில் நடத்துவார்
– மெய் சீஷராக
தாவீதை விரட்டிடும் சவுல் கைகள்
தளர்ந்திடவே அடங்கிடவே
பிலேயாமின் சாபம் பறந்தோடிப் போகும்
பரிசுத்தவான்களே கெம்பீரப்போம்
– மெய் சீஷராக
பரலோக வாசிகள் சுதேசிகள்
பரதேசிகள் சில சீஷர்கள்
பின் திரும்பிடாமல் விட்டதைத் தொடாமல்
பற்றும் விசுவாசத்தோடு முன் செல்வோம்
– மெய் சீஷராக
ஜெபமே எமது அஸ்திபாரமே
ஜெபமின்றியே ஜெயமில்லையே – ஆவியில்
ஜெபிப்போம் அற்புதங்கள் காண்போம்
ஆச்சிரியமாகவே நடத்துவார்
– மெய் சீஷராக
குணசாலிகள் கூடார வாசிகள்
கூட்டமாகவே கூடச் சேரவே
மணவாளனை நம் மன்னன் இயேசுவை தம்
மங்கள சுபதினம் கண்ணால் காண்போம்
– மெய் சீஷராக