ராஜாவாகிய என் தேவனே உம்மை நான் உயர்த்துகிறேன்
Raajaavaakiya En Thaevanae Ummai Naan Uyarththukiraen
Fr. S. J. Berchmans
ராஜாவாகிய என் தேவனே
உம்மை நான் உயர்த்துகிறேன்
உம் திருநாமம் எப்பொழுதும்
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்
நாள்தோறும் நான் போற்றுவேன்
என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
மிகவும் பெரியவர் துதிக்கு பாத்திரர்
துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்
துதி உமக்கே கனம் உமக்கே
மகிமை உமக்கே என்றென்றைக்கும்
உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம் (2)
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம்
– ராஜாவாகிய
எல்லார் மேலும் தயவுள்ளவர்
எல்லார்க்கும் நன்மை செய்பவர்
உம் கிரியைகள் எல்லாம் உம்மை துதிக்கும்
பரிசுத்தவாங்கள் ஸ்தோத்தரிப்பார்கள்
உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம் (2)
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம்
– ராஜாவாகிய
நோக்கி பார்க்கின்ற அனைவர்க்கும்
ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர்
(உம்) கையை விரித்து சகல உயிர்களின்
விருப்பங்களை நிறைவேற்றுகிறீர்
உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம் (2)
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம்
– ராஜாவாகிய