நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

புத்தி கெட்ட அத்தி மரமே ஓ

Puththi Ketta Aththi Maramae O

Moses Rajasekar

புத்தி கெட்ட அத்தி மரமே ஓ

சக்தி கெட்ட அத்தி மரமே – உன்னை

சக்தி தந்து கட்டிகாத்த முத்தான தோட்டானுக்கு

வெட்கம் தந்த அத்திமரமே – 2

ஒண்ணாம் வருஷத்திலும் ஒண்ணும் இல்லை

ரெண்டாம் வருஷத்திலும் கனியுமில்லை – உன்னில் – 2

உன்னை முட்டி போட்டு தொட்டு தொட்டு

கட்டிக் காத்த தோட்டானுக்கு

வெட்டிபோட மனதுமில்லை – புத்திக்கெட்ட

காய்ந்த மரமாக இருப்பதென்ன – நீ

கனியாத மரமாக நிலைத்ததென்ன – 2

மலடான மரமாக போனதென்ன – நீ

மன்னவனின் மகிமையை இழந்ததென்ன – 2

– உன்னை முட்டி போட்டு

காய்க்கும் மரமாக இருந்திடணும் – நீ

கனி தந்து தேவனுக்காய் வாழ்ந்திடணும் – 2

நீரோரம் நடப்பட்ட நல் மரமாய் – 2

பூத்துக் காய்த்து நீ குலுங்கிடணும் – நீ

– உன்னை முட்டி போட்டு