நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

போதும் போதும் ஐயா உந்தன் கிருபை

Pothum Pothum Aiyaa Unthan Kirupai

Moses Rajasekar

போதும் போதும் ஐயா உந்தன் கிருபை

உலகில் எனக்கு கிடைத்த நல் அருமை – 2

நீரே போதும் நீரே போதும் எனக்கு

உலகில் நீரின்றி வாழ்வேது எனக்கு – போதும் – 2

பொன்னும் பொருளும் எனக்கு வேண்டாம்

மண்ணின் ஆசை எனக்கு வேண்டாம் – 2

பட்டம் பதவி எனக்கு வேண்டாம்

பதவி ஆசை எனக்கு வேண்டாம் – 2

பதவி ஆசை எனக்கு வேண்டாம்

– போதும்

காசு பணம் எனக்கு வேண்டாம்

மாசு பட்ட வாழ்க்கை வேண்டாம் – 2

வேசிதன வாழ்க்கை வேண்டாம்

விருப்பமில்லா கடவுள் வேண்டாம் - 2

விருப்பமில்லா கடவுள் வேண்டாம் – போதும்

வாழும் உலகம் சின்ன கோலம்

மனித வாழ்வு கொஞ்ச காலம் – 2

ஓடும் நிமிடம் நிற்பதும் இல்லை

மனித வாழ்வு நிலைத்ததும் இல்லை – 2

மனித வாழ்வு நிலைத்ததும் இல்லை

– போதும்