நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

போதகர் வந்து விட்டார்

Pothakar Vanthu Vittar

Fr. S. J. Berchmans

போதகர் வந்து விட்டார்

உன்னைத் தான் அழைக்கிறார்

எழுந்து வா எழுந்து வா (4)

கண்ணீர் கடலில் மூழ்கி

கலங்கி தவிக்கிறாயோ

கலங்காதே திகையாதே

கர்த்தர் உன் அடைக்கலம் – மகளே

– எழுந்து வா

பாவச்சேற்றில் மூழ்கி

பயந்து சாகிறாயோ

தேவ மைந்தன் தேடுகிறார்

தேற்றிட அழைக்கிறார் மகளே

– எழுந்து வா

கல்வாரி சிலுவையைப் பார்

கதறும் இயேசுவைப் பார்

உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்

உன் துக்கம் சுமந்து கொண்டார்

– எழுந்து வா