நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பொன்னான இயேசுவை

Ponnaana Yesuvai

Ravi Robert

பொன்னான இயேசுவை

புண்ணிய நல் நேசரை - கொண்டு

செல்வோம் பூலோகமெங்கும்

அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம்

தேவனே வந்து நம்மை நடத்திடுவார்

தேவையறிந்து பயன்படுத்திடுவார்

அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்

அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை

அஞ்சாமல் செல்வோம்

வஞ்சகனை வெல்வோம் - அரணான

கோட்டைகளை பிடித்திடுவோம்

– பொன்னான

எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார்

இந்த நாளில் எங்கள் மூலம்

நிச்சயம் செய்வார்

எத்தனையோ நோய்கள்

அத்தனையும் போக்கும் - இயேசுவின்

இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம்

– பொன்னான

காலமும் கடலலையும் காத்திருக்காது

இந்த காலத்திலே உலகை கலக்கிடுவோம்

கல்லான நெஞ்சம் கரைந்திடச் செய்யும்

கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம்

– பொன்னான