பாடல்
பொல்லாத மனுஷன் புரிஞ்சு
Pollaatha Manushan Purinju
Moses Rajasekar
பொல்லாத மனுஷன் புரிஞ்சு
கொள்ளவில்லையே – நம்
நல்லாயன் இயேசுவை
அறிஞ்சு கொள்ளவில்லையே – இதை
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும்
மலராய் வாழ்கிறான் – தினம்
பூத்துக் குலுங்கி வாடிப் போகும்
பூவாய் வாழ்கிறான்
ஜீவனும் மரணமும் வாழ்வும்
தாழ்வும் தேவனின் கையிலே
எது நடந்தாலும் செய்வோம் நாமும்
தேவனின் சித்தமே
– இதை பொல்லாத…
மனம் போன போக்கில் தினமொரு
திசையில் அலைந்து திரிகிறான்
பணம் பத்தும் செய்யும் என்று
பகுடி பேரி ஆணவப்படுகிறான்
செல்வம் கல்வி ஞானம் உயர்வு
தேவனின் கையிலே
உயர்த்தும் தேவனின்
கையினில் அடங்கினால்
உயர்வு நிச்சயமே
– இதை பொல்லாத…