நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பிரியமானவனே

Piriyamaanavanae

Fr. S. J. Berchmans

பிரியமானவனே (பிரியமானவளே) – உன்

ஆத்துமா வாழ்வது போல் – நீ

எல்லாவற்றிலும் வாழ்ந்து

சுகமாய் இரு மகனே(மகளே)

வாழ்க்கை என்பது போராட்டமே

நல்லதொரு போராட்டமே

ஆவி தரும் பட்டயத்தை

எடுத்துப் போராடி வெற்றி பெறு

– பிரியமானவனே

பிரயாணத்தில் மேடு உண்டு

பள்ளங்களும் உண்டு

மிதித்திடுவாய் தாண்டிடுவாய்

மான் கால்கள் உனக்குண்டு மறவாதே

– பிரியமானவனே

ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்

ஒழுங்கின்படி ஓடு மகனே (மகளே)

நெருங்கி வரும் பாவங்களை

உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)

– பிரியமானவனே