பாடல்
பிளவுண்ட மலையே
Pilavunnda Malaiyae
D.G.S. Dhinakaran
பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே
பக்கம் பட்ட காயமும்
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவ தோஷம் யாவையும்
நீக்கும் படி அருளும்
எந்த கிரியை செய்துமே
உந்தன் நீதி கிட்டாதே
கண்ணீர் நித்தம் சொரிந்தும்
கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே
நீரே மீட்பர் இயேசுவே
யாது மற்ற ஏழை நான்
நாதியற்ற நீசன் தான்
உம் சிலுவை தஞ்சமே
உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன்
தூய்மையாக்கேல் மாளுவேன்
நிழல் போன்ற வாழ்விலே
கண்ணை மூடும் சாவிலே
கண்ணுக் கெட்டா லோகத்தில்
நடுத்தீர்வை தினத்தில்,
பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே