பாடல்
பயத்தோடும் நடுக்கத்தோடும்
Payaththodum Nadukkaththodum
Chandrasekaran
பயத்தோடும் நடுக்கத்தோடும்
கர்த்தாவே நான் ஜெபிக்கணுமே
உம் பாதத்தில் நான்
ஜெபிக்கும் போது – ஐயா
அபிஷேகம் இறங்கணுமே – 2
சரவ சிருஷ்டிகரே என்னைப்
படைத்தவர் நீர் தானையா – 2
நீர் இல்லா என் வாழ்விலே
நிம்மதியில்லையையா
– பயத்தோடும்
ஒளியாய் வந்தவரே எந்தன்
உள்ளத்தில் வாருமையா
இந்த உலகில் சுடரொளியாய்
என் வாழ்வை மாற்றுமையா
– பயத்தோடும்
சத்திய தேவாவியே உந்தன்
பாதையில் நடத்துமையா
தேற்றரவாளன் நீரே-என்னை
தேற்றிட வாருமையா
– பயத்தோடும்