நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பயப்படாதே கலங்கிடாதே திகையாதே

Payappadaathae Kalangidaathae Thikaiyaathae

Sirkali Yesuprakasam

பயப்படாதே கலங்கிடாதே

திகையாதே என் மகனே(மகளே)

நான் உன்னுடன் இருக்கின்றேன்

இயேசு உன்னுடன் இருக்கின்றேன்

பொன்னுள்ள இடங்களில் கொண்டுசெல்வீர்

அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்

ஆத்துமாவை தினம் தேற்றிடுவீர்

நீதியின் பாதையில் நடத்திடுவீர்

– பயப்படாதே

செங்கடல் எதிராய் வந்தாலும்

சேதங்கள் உன்னை அணுகாது

அக்கினி சூழையில் போட்டாலும்

விக்கினங்கள் உன்னை சூழாது

– பயப்படாதே

வரங்களினால் உன்னை அலங்கரிப்பேன்

வல்லமையால் நித்தம் நிரைத்திடுவேன்

ஆவியின் வரத்தால் அபிஷேகிப்பேன்

அக்கினியாய் உன்னில் பெலன் தருவேன்

– பயப்படாதே