நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பயந்து கர்த்தரின் பக்தி வழியில்

Payanthu Karththarin Pakthi Valiyil

பயந்து கர்த்தரின் பக்தி வழியில்

பணிந்து நடப்போன் பாக்கியவான்

முயன்று உழைத்தே பலனை உண்பான்

முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்

முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்– 2

உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்

தன்னிழல் திராட்சக் கொடிபோல வளரும்

கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்

எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்

எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்

– பயந்து கர்த்தரின்

ஒலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே

உயரும் பச்சிளம் கன்றுகள் போல

மெலிவிலா நல்ல பாலருன் பாலே

மிகவும் களித்து வாழ்வார் அன்பாலே

மிகவும் களித்து வாழ்வார் அன்பாலே– 2

– பயந்து கர்த்தரின்

கர்த்தர் உன் வீட்டைக் கட்டாவிடில் – அதைக்

கட்டுவோர் முயற்சி வீணாம அறி இதை

கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள்

கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

– பயந்து கர்த்தரின்