பாடல்
பரிசுத்த பரந்தாமனே
Parisuththa Paranthaamanae
Reenu Kumar
பரிசுத்த பரந்தாமனே
மகிமையின் மகாராஜனே
வல்லமையானவரே
அக்கினி அனலும் நீரே
என் மேல் இரங்குமைய்யா
உம் ஆவி ஊற்றுமைய்யா
என் நிலைமை மாற்றுமைய்யா
என் வாழ்வை தேற்றுமைய்யா
ஆவியே ஆவியே ஆராதிப்பேன் ஆவியே
ஆவியே ஆவியே பரிசுத்ததின் ஆவியே
வற்றாத நதியாகவே
என் உள்ளத்தில் தங்கிடவே
நான் உம்மோடு கலந்திடவே
நீர் என்னுள் பெருகிடவே
– என் மேல் இரங்குமைய்யா…….