பரனே என் இதயத்தில் வாரும்
Paranae En Ithayaththil Vaarum
Ravi Bharath
பரனே என் இதயத்தில் வாரும்
பரநோக்கம் நிறைவேற்ற வாரும்
அனுதினம் என்மனம் கழுவிடும்
அழகிய புதுமனம் தந்திடும்
பரிவுடன் பாவியை கண்டிடும் – என்
சுயமதை திருசலவை செய்திடும்
– பரனே
அதட்டிவிடும் நெஞ்சை
அகற்றிவிடும் நஞ்சை
புகுத்திவிடும் எனக்குள் பரமசிந்தை
பரிசுத்தம் கேட்கிறேன் உம் குழந்தை
அழுகிய சிந்தனை மங்கவே
மனதினுள் வசனங்கள் தங்கவே
அகமகிழ்ந்தெனதுள்ளம் பொங்கவே
அடைக்கலம் அருளுமே துங்கவே
– பரனே
திருக்குள்ளவன் மிஞ்சும்
கிறுக்குள்ளவன் கெஞ்சும்
கரத்துடனே உம்மிடம் கதறுகிறேன்
கிருபை கிடைக்கத்தானே பதறுகிறேன்
புவியதன் சோதனை குறையவே
பரமனின் போதனை நிறையவே
பகலதன் பிள்ளையாய் வளரவே
உலகினில் தீபமாய் ஒளிரவே
– பரனே
மயக்கத்திலே மனம்
கிரக்கத்திலே குணம்
உறக்கத்திலிருந்தென்னை எழுப்பிவிடும் – கெட்ட
உணர்ச்சிகள் அனைத்தையும் கொளுத்திவிடும்
அகமதின் கபடினை தள்ளவே
ஆவியின் கனிதனை அள்ளவே
அசுரனை அனுதினம் வெல்லவே
அவனியில் கிருபையைச் சொல்லவே
– பரனே